Skip to content

என்எல்சி தொழிற்சங்க தேர்தல்: திமுக அமோக வெற்றி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்எல்சி நிறுவனம். இங்கு சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள்  பணியாற்றுகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி. நவரத்னா நிறுவனம் ஆகும். இங்கு  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.

நேற்று இந்த தேர்தல் நடந்தது.  பொதுத்தேர்தல் போல  எல்லா கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்தன. திமுக தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்கும்படி  முதல்வர் ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக தொழிற்சங்கமான தொமுச 2507 வாக்குகள் பெற்று முதன்மை தொழிற்சங்கமாக வெற்றி பெற்றது. இதனால் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

error: Content is protected !!