சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு, நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கை தலைவர் என்னும் தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி கொளத்தூர் ஜிகேஎம் காலனி அரிச்சந்திரா மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. பகுதி இளைஞரணி அமைப்பாளர் திலீப்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நடிகர்கள் வடிவேலு, நாசர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளிதரன், நாகராஜ். மண்டலக்குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், தேப ஜவகர், வட்ட செயலாளர் ஆதவ்மணி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.Long Distance Bus & Rail
நடிகர் நாசர் பேசுகையில், “கட்சி என்றால் கொள்கை வேண்டும், இப்போது பிரபலமாக இருப்பதால் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். கொள்கையை அறிவிக்காமல் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். திட்டங்கள் என்றுமே கொள் கையாகாது. தமிழ்நாடு அரசு கொள்கையோடு செயல்பட்டு பல சாதனைகளை படைத்து வருகிறது. திமுகவிற்கு 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ளது” என்றார். பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசுகையில், “யார் வந்து நின்றாலும் என் தாய் தமிழ்நாட்டு மக்களை தலை குனியவிடமாட்டேன் என காவல் சாமியாக முதலமைச்சர் உள்ளார். முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி பெண்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்துள்ளது. ஒரு தலைவன் என்பவன் சாமானிய மக்களோடு இருக்கவேண்டும். பலருக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். 3 மணிக்கு வாங்க, சினிமா பார்க்கலாம் என இளம் தலைமுறையினரை நாசம் செய்கின்ற தலைவனுக்கு மத்தியில் பிள்ளைகளே நீங்கள் நன்றாக படிங்கள், மத்ததெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என முதலமைச்சர் சொல்கிறார்” என்றார்.
நடிகர் வடிவேலு பேசுகையில், “முதலமைச்சரின் தொகுதியில் நின்று பேசுவதற்கு பெருமையாகவும். மகிழ்ச்சியாகவும் உள்ளது. 37 வயது இளைஞர்போல் முதல்வர் செயல்படுகிறார். கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் பரபரப்பாக உள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட முதலமைச்சர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார், ஆனால், பாஜகவில் இருந்து ஒருவர்கூட குரல் கொடுக்கவில்லை, எதற்கெடுத்தாலும் திமுகவை அழிக்கவேண்டும், திமுகவை ஒழிக்கவேண்டும் என சொல்கிறார்கள், யார் யாரெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அவர்கள் அடையாளம் தெரியாமல் சென்றுவிடுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தஞ்சாவூர் கோபுரம்போல வரலாறு உண்டு. சமீபத்தில் முதலமைச்சர் உரிமை தொகை ஐந்தாயிரம் கொடுத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெற்று முதல்வர் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வார். இந்த விழா முதலமைச்சர் பிறந்தநாள் விழாவாக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் வெற்றி விழாவாகவும் உள்ளது. நான் இப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

