திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளை பேறு – திட்டமிட்ட பெற்றோர்களுக்கான அடையாளம் மற்றும் உடலும் மனமும் பக்குவம் அடைந்து உறுதியாகும் வயது 21 அதுவே பெண்ணிற்கு திருமணத்திற்கும் தாய்மை அடைவதற்கும் உகந்த
வயது என்னும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறு குடும்பம் சுகமான குடும்பம், வீடும் நாடும் நலம் பெற சிறு குடும்பம் ஏற்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.