காஞ்சிபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 16 பேர், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் அருகே வந்தபோது அந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த வேன் சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அழகபாண்டியன் என்பவர் உயிரிழந்தார்.
மேலும் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அழகபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

