திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முழுவதும் சோதனை செய்ததில் ஆன்லைன் லாட்டரி செய்து வந்த நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த கங்காதரன் (45), பழனி (வயது 48) முருகேசன் (62) மற்றும் பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 58) ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர் சீனிவாசன் ஆகியோர் கங்காதரனை மருத்துவ பரிசோதனைக்கு நாட்றம்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அப்போது மருத்துவமனையில் இருந்து கங்காதரன் காவல் துறையினர் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடியவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிமுக பிரமுகரான கங்காதரன் என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள மூன்று பேரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். நாட்றம்பள்ளியில் காவலர் பிடியிலிருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர் தப்பிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.