புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள். 26 வயதான இருவரும் இரட்டையர்கள். இதில் ஹேமச்சந்திரன் பி.எஸ்சி., முடித்துவிட்டு டிசைனிங் பணியில் இருந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட்டாக உள்ளார்.

ஹேமச்சந்திரனுக்கு உடல் எடை பிரச்சினை இருந்து வந்துள்ளது. இவரது சுமார் 150 கிலோவுக்கும் மேல் இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக கடந்த 22-ம் தேதி அவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆபரேசன் துவங்கிய 15 நிமிடங்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.