1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை கவிழ்த்ததன் மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை என்று பின்வாங்கினார். இப்போது கடம்பூர் ராஜூக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை இல்லை. வரலாற்று புரட்சி. கடம்பூர் ராஜூ செய்தது தான் வரலாற்று பிழை. ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” போன்றது. மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.