தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டி பேருந்து நிலையம், அறந்தாங்கி சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக பள்ளியில் நிறைவு பெற்றது. இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை தலைவரும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா நியூட்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா
கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுவுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.