அரியலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் கப்பல் குமார், தொகுதி செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் மணிவண்ணன் நகர தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இதில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர்
நசியாஹுசேன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தங்களை சேகரித்தனர். இதில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சேகரிக்கப்பட்ட ரத்தம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.