Skip to content

காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

காவலர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் சார்பில் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இன்று கே.கே.நகர் ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முகமது ரஃபீக், கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதனைத்தொடர்ந்து நடந்த இறுதிக்கட்ட போட்டியில் மாநகர காவலர் அணியும், வாலிபால் டிராகன்ஸ் அணியும்

போட்டியிட்டது. பரபரப்பாக நடந்த இறுதிக்கட்ட போட்டியில் 2-க்கு 1 என்ற கணக்கில் வாலிபால் டிராகன்ஸ் அணியினர் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தனர். இதனையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நினைவு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!