கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை வால்பாறை போன்ற சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாக விளங்குகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ள நிலையில் ஆழியார் அணை. பூங்கா, கவியருவி, வால்பாறை உள்ள இடங்களை இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையை ஒட்டி அதிகாலையில் இருந்தே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வால்பாறை ஆழியார் பகுதிகளை சுற்றி பார்க்க ஆழியார் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதனால் வால்பாறை சுற்றுலா செல்ல ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக வால்பாறை சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் அணிவகுத்து நிற்பதால் தற்பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.