Skip to content

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டார்.

கடந்த  7ம் தேதி சென்னையில்  தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி  ஒரு குட்டிக்கதை கூறினார். அது விரசமாக இருந்ததால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து சமூக வலைதளங்களிலும்

விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பிக்கள் குழுத்தலைவருமான  கனிமொழியும் பொன்முடி பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது- எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கூறியிருந்த  நிலையில் பொன்முடி துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!