திருச்சி தென்னூரில் இன்று பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வரவில்லை எனவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது என்றும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லைநகர் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்குள் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.