Skip to content

பிரதமர் வருகை: செங்கல்பட்டில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னை கிண்டி மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, அங்கு ட்ரோன்கள், ஹீலியம் பலூன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!