41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட் பகுதியில், நகர விற்பனை குழுவால் ஒதுக்கீடு செய்த 41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து, நகர விற்பனை குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சென்னை மாநகர கடை வியாபாரி சங்கங்களின் பொதுச் செயலாளர் எம் வி கிருஷ்ணன்
இங்கு நடக்கக்கூடிய கண்டனம் கூட்டம் என்பது சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்பது சட்டத்திற்கு புறம்பாக உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக செயல்படுகிறது. நேற்று முன்தினம் இங்கு அருகாமையில் இருக்கும் 41 கடைகளை, மூர் மார்க்கெட்டில் இருக்கும் கடைதாரர்கள் மாத வாடகை முறைப்படி செலுத்தி வருகிறார்கள்.
உள்ளே வியாபாரம் இல்லாத காரணத்தினால் அதை உயர் நீதிமன்றத்தில் அணுகி மாநகராட்சி உடைய ஒப்புதலோடு 41 கடைகளை உத்தரவிட்டு அந்த உத்தரவின் அடிப்படையில் இங்கு செயல்பட்டிருந்தது. இவர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக 100 ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று நகர விற்பனை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 41 கடைகளை மாநகராட்சி அப்புறப்படுத்தியுள்ளது.
மாத வாடகை குறைவாக இருக்கிறது. அதிக வாடகை தர வேண்டும் என்று மாநகராட்சி கூறியதாகவும், மாநகராட்சியின் குழுவே ஒரு கடிதம் கொடுத்து அதன்படி, வியாபாரம் செய்ய அனுமதித்தார்கள். திடீரென்று சனிக்கிழமை காலை, வழக்கம் போல மாநகராட்சி ஆணையர் பல்வேறு வழக்குகளில் புல்டோசர் கொண்டு வந்து கடைவரை அப்புறப்படுத்துவதும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தது. ஆனால் மாநகராட்சி நடவடிக்கை மக்கள் விரோத போக்காக இருக்கிறது.
உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்தது. நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாத ஆணையர் தன் சம்பளத்தில் ஒரு லட்சம் ரூபாயை அபராதமாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்றத்திற்கு கட்டப்பட்டவர்கள் தான் இந்திய குடிமக்கள். தமிழக குடி மக்கள். இந்த வழக்கிலும் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமையை இந்த வியாபாரிகள் சங்கம் கொண்டுவரும்.
2014 சாலை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் இருக்கிறது. அதன்படி 35, 588 வியாபாரிகளுக்கு அடையாள அட்டை இருக்கிறது. முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் பிறகு அந்த மாற்றிடத்தில் தொழில் துவங்கிய பிறகுதான் இந்த கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் அதுதான் விதிமுறை. மாநகராட்சியின் கண்டனத்திற்குரிய இந்த செயலை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வியாபாரிகள் நிச்சயம் விட மாட்டார்கள். மாநகராட்சிக்கு தக்க பாடத்தை நாங்கள் புகட்டுவோம். உடனடியாக இன்று மாலையே வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கான அந்த ஏற்பாடை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, முதலமைச்சர் கோட்டையை நோக்கி செல்லும் போராட்டம் தொடரும்.