புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா தலைமையில் இன்று (19.04.2025) வழங்கினார். உடன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

