மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது.. ராகுல் பாராட்டு

244
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கை வரவேற்று கடிதம் எழுதியுள்ளார். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டில் மத்திய அரசு சரியான் திசையில் சென்று கொண்டு இருப்பதாக பாராட்டி உள்ளார்.
 
“நிதி உதவி தொகுப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு, சரியான திசையின் முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது, என அதில் அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY