Skip to content

கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

  • by Authour

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். தீவைத்த நபர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டு இருந்தது மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.  ஷாருக் சைபி என்பவரை உத்தரபிரதேசம் சென்று  கேரள போலீசார் கைது செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!