தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
