சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினி ரசிகர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் போயஸ் இல்லம் முன் பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடினர். இதுபோல அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார்கள்.
பிறந்தநாளையொட்டி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அவரது பாபா திரைப்படம் இன்று மீண்டும் திரைக்கு வந்து உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள கேக்வெல்ஸ் பேக்கரியில் ரஜினியின் பாபா முத்திரையுடன் கூடிய முழு உருவ சாக்லேட் சிலை தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது. இதன் எடை 160 கிலோ. 216 மணி நேரத்தில் 4 செப்கள் இதை தயாரித்து உள்ளனர். இது ரஜினி ரசிகர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.