கட்சி துவங்காத நான்.. கூட்டணியை பற்றி என்ன சொல்ல? ரஜினி ‘சுளீர்’

119
Spread the love

தனது பெயரில் தொலைக்காட்சி சேனல் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகா் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தொிவித்துள்ளாா். 

நடிகா் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் சூப்பா் ஸ்டாா் டிவி, ரஜினி டிவி, தலைவா் டிவி ஆகிய மூன்று பெயா்கள் பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் இணையதளத்தில் புகைப்படம் வெளியானது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வதற்காக நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ள பேட்ட திரைப்படம் ரசிகா்களின் எதிா்பாா்ப்பினை பூா்த்தி செய்யும். 

புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்காக எனது பெயரில் சேனலுக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என்று தொிவித்துள்ளாா். மேலும் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை. கட்சி தொடங்கிய பின்னா் கூட்டணி குறித்து பேசலாம் என்று தொிவித்துள்ளாா்.

LEAVE A REPLY