Skip to content

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் பிறந்தநாள் வாழ்த்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பிரதமர் மோடி, “ரஜினி சாரின் தனித்துவமான ஸ்டைல், நடிப்பு ரசிகர்களை கவர்ந்தவை” என்று பாராட்டினார். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக நண்பர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை “தெய்வங்கள்” என்று அழைத்து நன்றி தெரிவித்தது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 75வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்தனர். தற்போது ஜெயிலர் 2, போன்ற படங்களில் நடித்து வரும் ரஜினி, உடல்நலம் நீடிக்கவும் இன்னும் பல படங்களில் நடிக்கவும் ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

error: Content is protected !!