சிவகங்கை மாவட்டம் மனகிரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ரியல் எஸ்டேட் அதிபர் இவருக்கு ராஜு வயது 26 என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர் ராஜு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதைத் தொடர்ந்து திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார் கடந்த சில தினங்களுக்கு சகோதரியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இது பற்றி அவரது தந்தை சங்கர் ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் தொழிலாளி திடீர் சாவு
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் சந்தன ராஜ் வயது 43 இவர் தனது சகோதரர் மதியழகன் உடன் இரு சக்கர வாகனத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது உடனே சகோதரர் மதியழகன் சந்தனராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சந்தனராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

