டில்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக அபார வெற்றியை பெற்றது. 27 வருடங்களுக்கு பின்னர் டில்லியில் பாஜக வெற்றி பெற்றது. அங்கு முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரேகா குப்தா, நேற்று மாலை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் டில்லி துணை நிலை ஆளுநனர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அதைத்தொடர்ந்து டில்லி ராம் லீலா மைதானத்தில் இன்று மதியம் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் சாகிப் சிங் உள்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், பல மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
ரேகா குப்தா டில்லியின் 4வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது