வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான பெண் ஈடுபட்டு வந்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்கள் அங்குள்ள சிசிடிவியில் பதிவான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில்
இதுவரை 270 முறை அவர் போக்குவரத்து விதிகளை மீறி உள்ளதாக போக்குவரத்து போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதமானது ஸ்கூட்டரின் விலையை விட கூடுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி இது போன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.