உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும் இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கேப்டன் ரோகித் சர்மாவும், ஓப்பனர் கில்லும் களம் இறங்கினர்.
ஆரம்பம் முதலே கேப்டன் ரோகித் அதிரடி காட்டினார். சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். 29 பந்துகளில் அவர் 47 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். 29வது பந்தை சவுதீ வீச அதை தூக்கி அடித்தபோது கேப்டன் கேன் வில்லியம்சன் கேட்ச் செய்து ரோகித்தை அவுட் ஆக்கினார். அதைத்தொடர்ந்து கோலி களம் இறங்கினார்.
கோலியும், கில்லும் கவனமுடன் ரன்களை சேர்த்து வருகிறார்கள். 13 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 5 ரன்களுடனும், கில் 49 ரன்களுடனும் களத்தில் நின்றிருந்தனர்.