Skip to content

உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குபின் மின்வாரிய தலைவர் ராதாகிருஷணன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும்வரை மின்சார சலுகை இருக்கும் . காய்கறிகளை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி விற்கலாம்.

மின் அடுப்புகள் கொள்முதல் செய்ய உணவகங்களுக்கு 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

ரேசன் கடை மூலம் மக்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை.

அனைத்து உணவகங்கள் , தேநீர் கடைகளுக்கு கூடுதல் மின்சார பயன்பாட்டிற்கு சலுகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை.

எப்போதும் 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கும் என உறுதி.

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது.

கடந்த 2 நாட்களில் பெட்ரோல் விற்பனை , 100 % , டீசல் 75 % கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தற்போது, பெட்ரோல், டீசல் விற்பனை வழக்கமான நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் போதிய அளவில் சிலிண்டர் கையிருப்பு உள்ளது.

error: Content is protected !!