முதன்முறையாக சபரிமலையில் பெண் போலீஸ் பாதுகாப்பு.. மீண்டும் பதற்றம்

198
Spread the love

சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி வரை நுழையவில்லை. இன்று இந்த கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.  இதற்காக கோவிலுக்கு முன் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் வர உள்ளதாக கூறப்படுகிறது.  அதேசமயம் ஆண் பக்கதர்களும் கோவிலை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள்.  இந்த நிலையில் முதல்முறையாக சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 15 பெண் காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் 50 வயதிற்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுவரை அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்பிற்கு நின்றதே இல்லை. முதல்முறை இப்படி பெண் காவலர்கள் அங்கே நிற்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்று பெண்கள் அந்த கோவிலுக்குள் நுழைய போகிறார்களா என்று பெரிய கேள்வி எழுந்ததுள்ளது.

LEAVE A REPLY