கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் இன்று காலை சில்லி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தண்ணீர் குடிப்பதற்காக ஆழியார் வால்பாறை

சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்தது . இதனை அடுத்து வனத்துறையினர் சாலையில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் குறுக்கே வராதவாறு ஆங்காங்கே நிறுத்தினர் பின்னர் யானை ஆழியார் வனப்பகுதிக்குள் சென்றது இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

