தமிழ் நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி, பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை பொறுக்க முடியாத சிலர், இந்த திட்டம் குறித்தும், பெண்களை அவதூறு செய்யும் வகையிலும் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த பெண்கள், இப்படி வீடியோ வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற உள்ள மகளிரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் என்பவரை கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.