Skip to content

கடுமையாக விமர்சிக்க வைத்துவிடாதீர்கள்- EDக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

MUDA என்கிற மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மகாராஷ்டிராவில் தனக்கு நிகழ்ந்த மோசமான நிகழ்வை நினைவு கூர்ந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகளை சீண்டாதீர்கள், உங்களை கடுமையாக விமர்சிக்க வைத்து விடாதீர்கள் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் நாடு முழுவதும் அரசியல் சண்டைகளுக்கு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை எச்சரித்த நீதிபதிகள், அரசியல் மோதலை தேர்தல் களத்தில் மட்டுமே கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். அத்துடன் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!