Skip to content

பிறந்தநாளில் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்…நன்றி தெரிவித்த சூர்யா.!

  • by Authour

நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் சினிமா தொடக்கத்தில் விமர்சனங்கள் வரிசைக்கட்டினாலும், ‘நந்தா’ படத்தில் மெருகேறிய அவரின் நடிப்பு இன்று இந்திய அளவில் உச்சம் தொட்டுள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு அவர் மாடியிலிருந்து கையசைத்து நன்றி தெரிவித்தார். ரசிகர்கள் பதாகைகள், பூக்கள் மற்றும் வாழ்த்துகளுடன் உற்சாகமாகக் கூடியிருந்தனர். அந்த காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.  ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது திரைப்படங்கள் மூலம் சமூக கருத்துகளை வெளிப்படுத்துவதோடு, சமூகப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார். சூர்யா 2008-ல் தொடங்கிய அகரம் பவுண்டேஷன், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயிற்சி, மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் இந்த பணிகள் அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக ஆர்வலராகவும், கல்வியாளராகவும் உயர்த்துகின்றன.
error: Content is protected !!