Tag: கப்பல்

  • உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

    உக்ரைன் கப்பல் மீது… ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

    உக்ரைன்  ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat) மூலம் தாக்குதல் நடத்தியது.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த தாக்குதலில் உக்ரைனின் கப்பல் மூழ்கியது. இது ரஷ்ய கடற்படையின் ஆளில்லா படகு மூலம் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதலாக கருதப்படுகிறது. உக்ரைன் தரப்பில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய நிலையில், குறைந்தபட்சம் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கப்பல் 2019-ல் துவக்கப்பட்டு, முதலில் மீன்பிடி கப்பலாக இருந்து பின்னர் ராணுவ உளவு பணிகளுக்காக மாற்றப்பட்டது. இதில் ரேடியோ உளவு அமைப்பு மற்றும் 30 மி.மீ. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், இந்த தாக்குதல் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் “ஜூலை புயல்” பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா படகு மூலம் நடத்தப்பட்டதாகவும், இது சுமார் 25 கி.மீ. தூரம் டான்யூப் ஆற்றில் பயணித்து இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

    நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

    வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் நிறுத்தப்பட்ட நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. இலங்கை செல்ல  காலை உணவு, மதிய உணவுடன் சேர்த்து ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 4,250 வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும் என சுபம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • கப்பலில் கிளாமர் போட்டோஷூட்…. நடிகை ரம்யா பாண்டியன்… ஸ்டைலிஷ் கிளிக்ஸ்…

    கப்பலில் கிளாமர் போட்டோஷூட்…. நடிகை ரம்யா பாண்டியன்… ஸ்டைலிஷ் கிளிக்ஸ்…

    2015ல் வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

    ramya pandian

    ramya pandian

    அப்படத்தில் ரம்யாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் ரீச் ஆகாததால் பெரும்பாலானோர் அவரை நோட் பண்ண தவறிவிட்டனர்.

    அப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து தனது முழு நடிப்பு திறனை வெளிக்காட்டி மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார்.   ஜோக்கர் படத்தில் ரம்யாவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது, பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டினர்.ramya pandian

    ramya pandian

    தொடர்ந்து ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் பக்கம் திரும்பினார். மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.ramya pandianramya pandian

    ramya pandian

    தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

  • நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

    நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

    நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை 10 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கப்பல் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகை வந்தடையும்.

    நாகை-இலங்கை பயணிகள் கப்பலின் வழக்கமான சேவை ஆக. 18 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.18 முதல் நாகையில் காலை 8 மணிக்கு கப்பல் புறப்பட்டு பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். ஆக.18 முதல் இலங்கையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு கப்பல் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை வந்தடையும். இலங்கைக்கு கப்பலில் பயணம் செய்ய www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எகனாமி பிரிவில் ரூ.5,000 கட்டணமும், பிரீமியம் எகனாமி பிரிவில் செல்ல ரூ.7,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • நாகை – இலங்கை  கப்பல் போக்குவரத்து   வரும் 16ம் தேதி தொடக்கம்

    நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து வரும் 16ம் தேதி தொடக்கம்

    நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு  வரும் 16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது.  சிவகங்கை என்று பெயரிடப்பட்ட கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவுகளை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளலாம். இதில் இருவித கட்டணம் வசூலிக்கப்படும்.

  • கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

    கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி எம்டி பேட்ரியாட் என்ற கப்பல் பழுது நீக்கும் பணிக்காக சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. சென்னை துறைமுகம் வளாகத்தில் கோஸ்டல் ஒர்க் பிளேஸ் எந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் இருந்த ஒரு போல்ட்டை காஸ் கட்டர் மூலமாக அகற்றும்போது அருகில் இருந்த காஸ் பைப் லைன் மீது பட்டு வெடித்து இருக்கிறது. இதில் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஜீவரத்தினம்நகரை சேர்ந்த புஷ்ப லிங்கம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை துறைமுகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

    காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்…

    இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இலவச பன்முக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்தில் நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமினை, தமிழ்நாடு,புதுச்சேரி பிராந்திய கடற்படை அட்மிரல் கமாண்டர்,ரவிக்குமார் திங்ரா துவக்கி வைத்தார். இன்று துவங்கிய பன்முக மருத்துவ முகாமில்,நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது உடல்நிலை பரிசோதனைக்காக வருகை தந்தனர்.

    பின்னர் அங்கு காது மூக்கு கண் உள்ளிட்ட உடல்நலம் பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்கு, ராணுவ சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள்

    வழங்கப்பட்டன. கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பன்முக மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த மீனவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையின் கப்பலையும் இன்று சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த கடற்படை கப்பலின் பணிகள் மற்றும் அதில் நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து கடற்படை வீரர்கள் மக்களிடம் எடுத்துக்கூறினர்.

  • 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

    3 இலங்கை கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது…

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த  இலங்கையை சேர்ந்த  ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை  கடலோர காவல் குழும போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அவர்களது படகில் 50 லிட்டர் பெட்ரோல் டார்ச் லைட் பெயரளவிற்கு நண்டு பிடி வலை  ஆகியவை இருந்தது. சீனாவில் பயன்படுத்தக்கூடிய ஸ்பீட் எஞ்சின் மோட்டார் அந்த படகில் பொருத்தப்பட்டிருந்தது.

    ஆறுகாட்டுத்துறையில் கரை சேர்த்த மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள்  கடற்கொள்ளையர்கள் என தெரியவந்தது.  அவர்கள் தமிழக மீனவர்கள் படகுகளை  கடலில் மறித்து கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்டு இருந்தது தெரியவந்தது.  ஆற்காட்டு துறை மீனவர்கள் தாங்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் பொழுது அந்த மூன்று பேரில் சிவகுமார் என்பவரை அடிக்கடி கடலில் பார்த்ததாகவும் தங்கள் படகில் மீன் பிடிக்க செல்லும் பொழுது  கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  தங்களை தாக்கியதாதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மூன்று பேரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி கைது செய்யப்பட்டு  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேதாரண்யம் பகுதியில் 300 கிலோ கஞ்சா பிடிபட்டு ஆறு பேர் கைதாகி உள்ள நிலையில் தற்பொழுது இந்திய கடல் எல்லையில் ஸ்பீடு படகுடன் ஸ்ரீலங்கா கடற்கொள்ளையர்கள் பிடிபட்டதும் பொதுமக்களிடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மூன்று கடற்கொள்ளர்களையும் கைது செய்து வேதாரண்யத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னையில் உள்ள புழல் சிறைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

     

     

  • தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

    தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

    இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான கலந்துரையாடல் கூட்டம் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்தது.இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான், இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள், இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், நில அளவை அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையில் உள்ள தனுஷ்கோடிக்கும் இடையேயான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும். ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்படும் சாதகத்தன்மை பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு ஆன்மிக பயணமாக 3 கோடி பேர் வருகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரை ராமர் பாலம் வழியாக இலங்கைக்கு அழைத்து வந்தால், அதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடல் கூட்டம் சாதகமாக முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

    697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

    மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர் 23-ந் தேதி புறப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கலாசார சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடைசியாக இந்தியாவில் கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.எஸ். அமேரா சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று காலை தூத்துக்குடி புதியதுறைமுகத்திற்கு வந்தது. இங்கிருந்து துறைமுக குடியுரிமை அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் நெல்லை நெல்லையப்பர் கோவில் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் மாதா கோவில் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா இடங்களை பார்வையிடுகின்றனர். அதன் பின்னர் இன்று மாலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கை துறைமுகம் புறப்பட்டு செல்ல உள்ளனர்.

error: Content is protected !!