சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டம்
திருப்பூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமானது. சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தர கொட்டகை அமைத்து பணிபுரிந்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகை வீட்டில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து விபத்தாகியுள்ளது.