Skip to content

ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 1 கோடி  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலம் 45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி  100% குடும்பங்களையும் சந்தித்து 1 கோடி குடும்பங்களையும்,  2 கோடி உறுப்பினர்களை திமுகவில் உறுப்பினர்களாக பதிவு செய்ய இருக்கின்றனர்.  அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள  68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக பதிவு செய்தல் வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.,

45 நாட்களுக்குப் பிறகு  ஆகஸ்ட் 15ம் தேதி  ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையின் நிறைவு விழா நடைபெறும் எனவும், அதற்குள்ளாக 2 கோடி உறுப்பினர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையை ஜூலை 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில்,   ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில்,  திமுகவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!