நாட்டிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் முதலி டத்தை அடையப் பாடுபட வேண் டுமென தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார்.
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு டிசிஎம்- 48 என்ற தலைப்பில் திருச்சி தெற்கு மாவட் டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 24 ஆவது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மற்றும் மாநகர வர்த்தக அணி சார் பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சி பால்பண் ணையில் நடை பெற்றது.இதில் அமைச்சர் அன் பில் மகேஸ் பொய்யாமொழி பங் கேற்று சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,
நாட்டிலேயே அதிக இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை உருவாக் குவதில் முதலிடம் வகிப்பது தமிழ கம்தான் என ரிசர்வ் வங்கியே கூறியுள்ளது. எனவே, நாம் அனைவ ரும் முதல்வரின் கரத்தை வலுப்ப டுத்தி, நாட்டிலேயே தமிழகத்தை பொருளாதாரத்தில் முதலிடத்தில் கொண்டு வரப் பாடுபடவேண்டும். தற்போது விருது பெறுபவர்க ளைப் பார்த்து இளைய சமுதாயத்தினர் சாதனை புரிய வேண்டும் என்றார்.மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில் வகித்தார். முன்னதாக, விழாவுக்கு
மாவட்ட வர்த்தக அணி அமைப் பாளர் செந்தமிழ்ச் செல்வன், மாநகர அமைப்பாளர் கேபிகே. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணித் தலைவர் பாலாஜி வர வேற்றார். மாநகர செயலாளர் மு. மதி வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

