கரூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளரும், மின்சார துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று 2023 ம் ஆண்டிற்கான மாத காலண்டர்கள் விநியோகிக்கும் பணி மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி பகுதியில் தொடங்கப்பட்டது.
இந்த காலண்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி ஆகியோரது உருவப்படத்துடன், திமுக அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள் விளக்கப்பட்டுள்ளது.
இந்த காலண்டர்கள் கரூர் நகரம் முழுவதும் திமுக நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த காலண்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கரூர் மாநகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் தலைமையில் 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் தம்பி ராஜேந்திரன், 47வது வட்ட கழக செயலாளர் ராமலிங்கம், மேற்கு மாநகர பகுதி இளைஞரணி செயலாளர் கணேஷ்பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இதனை வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள்.