தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 1, 2026) தைப்பூசம் மற்றும் வள்ளலார் (வடலூர் இராமலிங்கர்) நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல் பார்கள் (FL1 முதல் FL11 வரை) அனைத்துக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
வழக்கமாக விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் டாஸ்மாக் விற்பனை கோடிக் கணக்கில் அதிகரிக்கும் நிலையில், நாளை முழுமையான விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

