Skip to content
Home » கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

கிணற்றில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….

  • by Senthil

திருச்சி, மண்ணச்சநல்லூர், மூவாரம் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மகன் புகழேந்தி (14). சந்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு புகழேந்தி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் விளையாடியபோது எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இது தெரியாமல் வெகு நேரமாக புகழேந்தியை காணவில்லை என அக்கம் பக்கத்தில் தேடிவந்தனர். இந்நிலையில்

 

நேற்று இரவு கிணற்றிலிருந்து சத்தம் வரவே அருகில் சென்று பார்த்தபோது புகழேந்தி கிணற்றில் கிடந்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து தீயணைப்பு வீரர் முத்துகுமார் தலைமையில்  புகழேந்தியை  உயிருடன்  மீட்டனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினருக்கு குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!