Skip to content

கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கெடு நிறைவடையும் நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ” அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார், ஜெயலலிதா அதனை கட்டிக் காத்து வளர்த்தார். அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம், மாற்றான் தோட்டத்திற்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம், அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்றுதான் அன்று மனம் திறந்து பேசினேன், எனது பேச்சுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது. புரிகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

error: Content is protected !!