Skip to content

கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!..

  • by Authour

பிரபு சாலமன் இயக்க இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார் இதன் அறிவிப்பை நடிகர் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.  பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது கும்கி திரைப்படம். யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் இப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். டி.இமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.  இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து கும்கி 2 திரைப்படம் உருவாக உள்ளது. இதனை படக்குழு மோஷன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமோனே இயக்க, இதற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!