தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று வந்த பிறகு மின் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாது. இதனிடையே மேற்கொள்ளப்படும் மின் கொள்முதல் செய்யும் நிலையும் மாறும்.
அதே நேரத்தில் அவ்வப்போது வீசக்கூடிய சூறாவளி காரணமாக மரங்கள் சாய்ந்து, மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் பாதிக்கப்படும்போது, ஊரகப் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதற்காக நடமாடும் குழு அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
மின் நுகர்வோர்கள்தான் நமக்கு ராஜாக்கள். எனவே அவர்களுடைய குறைகளை நள்ளிரவிலும் ஊரகப் பகுதியாக இருந்தாலும், பாரபட்சமின்றி சென்று நிவர்த்தி செய்ய வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மிக விரைவாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
