திருச்சி, மேலப்புதூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பதினெட்டாம் ஆண்டு கந்த சஷ்டிவிழா, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண உற்சவ விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கடந்த 22-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அஸ்திர ஹோமம், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 5 மணி முதல் 7 மணி வரை மகா அபிஷேகம் தீபாரதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் 9 மணி வரை சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது . இன்று மகாபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதைத்தொடர்ந்து காலை 10:30 மணி முதல் 12 மணிக்குள் முருகன் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்
- by Authour

