அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கட்டிடக்குழு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையினை திறந்து வைத்தார். பின்னர் விழா மலரினை வெளியிட்டு பள்ளியின் ஆண்டு விழாவில் உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை
வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளி கட்டிடக்குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் மாசிலாமணி, ஆசிரிய பெருமக்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.