Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில் இருந்தே குறைந்து வருகிறது. அவ்வபோது விலையேற்றம் காணப்பட்டாலும், விலை குறைவால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். டாலர் மதிப்பு சரிவு, அமெரிக்க வங்கி வட்டி விகிதம் மாற்றம், போர் பதற்றம், பணவீக்கம், உலக நாடுகளின் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை விறுவிறுவென உயர்ந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் போர் பதற்றம் குறைந்த நிலையில், தற்போது வர்த்தகத்திற்காக அமெரிக்க டாலரின் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருக்கிறது. டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் காரணத்தால், உலக நாடுகளின் வங்கிகள் தங்களிடம் இருக்கிற தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன. அதே போல், தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், அதிக லாபம் தரக் கூடிய பங்குச்சந்தையை முதலீட்டாளர்களும் தேர்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 1 கிராம் தங்கம் ₹260 அதிகரித்து ₹14,680-க்கும், 1 சவரன் ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!