இந்தியா, பாகிஸ்தான் இடையே கிட்டத்தட்ட போர் மூண்ட நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் திமுகவும், தமிழ்நாடும் எப்போதும் இந்திய ராணுவத்துக்கு துணை நிற்கும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்து உள்ளார். டிஜிபி அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி போர் நினைவு சின்னம் வரை நடைபெறும். பேரணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து நமது ஒற்றுமை, ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுவதாகவும், இதில் அனைவரும் பங்கேற்கும்படியும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார். இந்திய ராணுவத்துக்கு நமது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவிக்க வேண்டிய தருணம் இது என்றும் முதல்வர் கூறி உள்ளார்.