ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் வர உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலைமை சீராக பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய நகரங்கள், மாவட்டங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, மேலும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்குமேல் பதவியில் உள்ளவர்களை சொந்த மாவட்டங்களில் நியமிக்கக்கூடாது என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் நேரடியாக தொடர்புள்ள அதிகாரிகளை கட்டாயம் இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

