கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் , கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன்,
சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மதிமுக. பொதுக்குழு உறுப்பினர் கவிச்செல்வம், மனித நேய மக்கள் கட்சி அப்துல் கனி, ஆம் ஆத்மி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜபார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.