பாபரி மசூதி இடிப்பு தினம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாநில பொதுச்செயலாளர் அகமது நவாவி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அருள் உள்ளிட்ட 400 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல மரக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாவட்ட தலைவர் முகமது ராஜா உள்ளிட்ட 750 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தில் முன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் ஆயிரத்து 150 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2022/12/valakku26.jpg)