திருச்சி அதிமுக 3 ஆக பிரிகிறது? புறநகருக்கு யார்?

1401

திருச்சி அதிமுக மாநகர் மற்றும் புறநகர் என இரண்டாக உள்ளது. மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்பி குமாரும், புறநகர் மாவட்டத்திற்கு முன்னள் எம்பி ரத்தினவேலும் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே திருச்சி அதிமுக 3 ஆக பிரிக்கபடுகிறது, என்கிற தகவல் உலாவி வருகிறது. குறிப்பாக மாநகர் அப்படியே இருக்கும், புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்காகவோ, கிழக்கு, மேற்காகவோ பிரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் புறநகர் பகுதிகளில் படுதோல்வியை தழுவியது அதிமுக. இந்த தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக புறநகர் அதிமுக இரண்டாக பிரிக்கப்படும் என தகவல்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. அவ்வாறு பிரிக்கப்படும் பட்சத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் என்றும் ஆனால் கண்டிப்பாக முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு 2ல் ஒன்றில் மாவட்ட செயலாளராக வாய்ப்பு உள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது

LEAVE A REPLY